கோழி, முட்டை சாப்பிட்டு கொரோனா பாதிப்பு என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு

0 1819

கோழி மற்றும் முட்டை சாப்பிட்டதால் கொரோனா பாதிப்பு என்று நிரூபித்தால் 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் அறிவித்துள்ளனர்.

நாமக்கல்லில் நடைபெற்ற அவசர ஆலோசனைக்கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், கொரோனா தொடர்பாக சமூகவலைதளங்களில் பரப்பப்பட்ட பொய்யான வதந்திகளால் கோழி மற்றும் முட்டை விற்பனையில் 500 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார். மேலும் இவ்வாறு வதந்தி பரப்புவோரை கண்டறிந்து தக்க தண்டனை வழங்க வலியுறுத்திய அவர், கோழி அல்லது முட்டை சாப்பிட்டதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என யாரேனும் நிரூபித்தால் 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments