ஈராக்கின் புதிய பிரதமராக அட்னான் ஸூர்ஃபி தேர்வு

0 742

ஈராக்கின் புதிய பிரதமராக அட்னான் ஸூர்ஃபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அந்த நாட்டில் அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து, பிரதமர் அப்தெல் மஹதி தனது பதவியை கடந்த டிசம்பர் மாதம் ராஜினாமா செய்தார்.

தற்போது அவர் இடைக்கால பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில் அப்தெல் மஹதிக்கு பதிலாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் முகமது அல்லாவியை புதிய பிரதமராக அதிபர் பர்ஹம் சலே நியமித்தார். இவருக்கும் போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தால் அட்னான் ஸுர்ஃபியை புதிய பிரதமராக அதிபர் பர்ஹம் சலே அறிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments