கொரோனா பாதிப்பு - வெறிச்சோடிய இந்தியாவின் முக்கிய நகரங்கள்

0 1644

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகளால் முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொரோனாவால் இந்தியாவில் மூன்றாவது நபர் மரணம் அடைந்தார். மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது நபர் நேற்று காலை உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. கொரோனாவை பரவ விடாமல் தடுப்பதற்கு முக்கிய சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் வெளிநாட்டுப் பயணிகள் வரும் தாஜ்மகால் இம்மாதம் இறுதி வரை மூடப்பட்டது. இதனால் அங்கு வந்த பல வெளிநாட்டவர்கள் தூரத்தில் தாஜ்மகால் தெரியும் வகையில் படம் எடுத்துக் கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

டெல்லியில் உள்ள செங்கோட்டை, குதுப் மினார், மகாத்மா காந்தி நினைவிடம் உள்ளிட்டமுக்கிய தலங்கள் மூடப்பட்டுள்ளன. மும்பையில் சித்தி விநாயகர், மகாலட்சுமி கோவில்கள், ஷிர்டி சாய்பாபா கோவில் போன்றவையும் மூடப்பட்டுள்ளன.

கொரோனாவால் மக்கள் வீடுகளில் அடைந்துக் கிடக்கின்றனர். இதனால் முக்கிய வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டு சாலைகளில் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.

மும்பை , சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் வழக்கமான கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதனிடையே தனியார் மருத்துவமனைகள் கொரோனா பாதிப்புடையவர்களுக்கு சிகிச்சையளிக்க படுக்கைகளை காலியாக வைத்திருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இதர அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை ஏப்ரல் 15ம் தேதிக்குப் பின்னர் ஒத்திவைக்கவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments