பாதிப்பில் இருந்து மீளுமா அமெரிக்கா ?

0 676

சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை தவிர்க்க அமெரிக்க மருத்துவமனைகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு

 சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, கடைசி முயற்சியாக கடந்த ஜனவரி மாதம் ஹூபேய் மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நான்கு வாரங்களுக்கு அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பத்தாயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு தீவிரம் அடைந்தோ அல்லது கவலைக்கிடமான நிலையிலோ காணப்பட்டது.

இத்தகைய நிலையைத் தவிர்க்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே பணிபுரிய வைப்பது, சமூக ரீதியான நிகழ்வுகள் போன்றவற்றை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.இதனால் பாதிப்புகள் குறையலாம். எனினும் இரண்டு பெரிய அமெரிக்க நகரங்களில் ஒரே நேரத்தில் பாதிப்பு காணப்படுமாயின், அமெரிக்காவின் சுகாதாரத்துறையின் சுமை அதிகரிக்கும். இத்தகைய நிலையில் அமெரிக்கா சில நடவடிக்கைகளை எடுக்கலாம்...

இத்தாலியிலும் சீனாவிலும் சுகாதாரத்துறையின் முறைமைகள் செயலிழந்த நிலையில் உயிர்ச்சேதம் அதிகரித்தது. எனவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை வரம்பு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைப்பது முதல் நடவடிக்கையாகும்.

இதனால் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்கவும், மக்கள் வீடுகளுக்குள் இருக்கும்படியும் வலியுறுத்துவதே எண்ணிக்கையை உயரவைக்காமல் கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாகும். இந்நோய் பரவாமல் தடுப்பது ஒவ்வொரு தனிநபர் சார்ந்த விஷயமாக இருப்பினும் ,அரசு தனது மருத்துவமனைகளின் சேவையை விரிவுபடுத்த வேண்டும். நியுயார்க்கில் சுமார் 57 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன.

இதில் 8 ஆயிரத்து 200 படுக்கைகள் ஐசியு பிரிவு சிகிச்சையளிக்கும் பிரிவுக்குரியவை. வூகான் அளவிலான நோய் பரவல் நியுயார்க்கில் இருக்குமாயின் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளில் யாரை புறநோயாளியாக சிகிச்சையளிப்பது, யாருக்கு தீவிர சிகிச்சையளிப்பது என்பது போன்ற நடவடிக்கைகளை மருத்துவமனைகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் இருந்து விலகிய பரிசோதனைக் கூடங்களை அமைக்கலாம்.

அடுத்து கோவிட் 19 நோய்க்கு சிகிச்சையளிக்கும் திறன் மிக்க மருத்துவர்கள் தேவை. வயதான மருத்துவர்களும் செவிலியர்களும் சிகிச்சையளிப்பதைத் தவிர்க்கலாம். எல்லைகளைத் தாண்டியும் மருத்துவர்கள் சேவை புரிவதற்கு தற்காலிக உரிமத்தை அரசு வழங்கலாம். மூன்றாவதாக மருத்துவமனைகள் வழக்கமான மருத்துவ சிகிச்சைகளில் இருந்து விடுபட வேண்டும்.அதன் பணிச்சுமை குறைக்கப்பட்டு முடிந்தளவுக்கு இதர சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.

டெலி மெடிசன் முறையை விரிவுபடுத்துவதன் மூலம் கோவிட் 19 நோயாளிகளை தனிமைப்படுத்தி கவனிக்க முடியும். இதர நோயாளிகள் விரைவில் சிகிச்சை முடித்து வீடு திரும்புவதற்கு உதவும் வகையில் திறன் மிக்க செவிலியர்கள் பணியமர்த்தப்படலாம். இத்தகைய வசதிகளை கோவிட் 19 நோயாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்து மருத்துவமனைகள் செய்ய வேண்டும்.

இதன் மூலம் இதர சிகிச்சை பெறும் இதர நோயாளிகளின் படுக்கைகள் காலியாகும் மருத்துவமனைகள் தங்கள் இடத்தை விரிவுபடுத்தி கூடுதலான நோயாளிகளை ஏற்கும் வகையில் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொண்டு 20 சதவீதம் வரை அதிகமான பேர்களை அனுமதிக்கலாம்.

இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு மருந்து நிறுவனங்கள் முயற்சி எடுத்தாலும் குறைந்தது ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. உடனடியாக மருந்து கண்டுபிடிக்க பாதிக்கப்பட்டவரின் ரத்த மாதிரிகளை பரிசோதிப்பது பலனளிக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் குணம் அடைந்தவரின் ரத்தத்திலேயே நோய்க்கான மருந்து மறைந்திருக்கிறது.

anti body எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருந்தை ஆறுமாதத்திற்குள் கண்டுபிடிக்கலாம். அதுவே சிறந்த தீர்வாக காட்சியளிக்கிறது.
எபோலா போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்பட்ட anti body மருந்துகள் இத்தகைய வைரஸ் நோய்களுக்கான சிகிச்சை குறித்த நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments