சிறுமிகளிடம் சில்மிஷம்... வியாபாரிக்கு தர்மஅடி ..!

0 10126

கோவை மாவட்டம் சூலூரில் பேன்சி ஸ்டோருக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரியை மடக்கி பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். 

இருகூர் என்.ஜி.ஆர்புரத்தை சேர்ந்த கிரிஸ்டோபர் என்பவர் சூலூர் அண்ணமடை வீதியில் மோனிஷா அழகுநிலையம் என்ற பெயரில் பெண்களுக்கான ஒப்பனைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார்

கடந்த சில மாதங்களாக கிறிஸ்டோபர் அப்பகுதியில் இருக்கும் 10 முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகளை தனிமையில் அழைத்து வந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்து திங்கட்கிழமை சிறுமி ஒருவரின் குடும்பத்தினர் கிறிஸ்டோபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கடையை மூடிவிட்டு கிறிஸ்டோபர் சென்றுவிட்டார்.

இந்த விவகாரம் மெல்ல அந்த தெரு முழுவதும் கசிந்த நிலையில், அவர்கள் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். செவ்வாய்கிழமை கடையைத் திறக்க கிறிஸ்டோபர் வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது தாய், மனைவி, சகோதரி என குடும்பத்தினர் அனைவரும் வந்து அப்பகுதி மக்களிடம் மன்னிப்பு கேட்டு சமாதானம் பேச முயன்றுள்ளனர். ஆனால் கிறிஸ்டோபர் நேரில் வந்து தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறியதால், குடும்பத்தினர் அவருக்கு போன் செய்து வரவழைத்தனர்.
கிறிஸ்டோபர் வந்ததும் அவரை அப்பகுதி மக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதனை எதிர்பார்க்காத கிறிஸ்டோபரின் குடும்பத்தினர், அங்கிருந்தவர்களிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு அவரை மீட்டு அழைத்துச் சென்றனர்.இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் எவரும் காவல்நிலையத்தில் புகாரளிக்க முன்வராததால் கிறிஸ்டோபர் குடும்பத்துடன் தப்பிச்செல்லும் நிலை உண்டானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments