தாய்லாந்தில் இரட்டைக் குண்டு வெடிப்பில் 25 பேர் படுகாயம்

0 665

தாய்லாந்தில் நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

யலா மாகாணத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அரசு அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. இதனால், அந்த கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் தான் வைத்திருந்த கையெறி குண்டு ஒன்றை அலுவலகத்திற்குள் வீசிச்சென்றார். இந்த தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் அலுவலகத்திற்கு வெளியே வெடிகுண்டுகளால் நிரப்பி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும் வெடித்து சிதறியது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் அரசு அலுவலகம் அருகே இருந்த போலீசார், ராணுவ வீரர்கள் உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments