20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுமா..? சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பதில்

0 3654

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும் அக்டோபர் மாதம் திட்டமிட்டப்படி 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

7வது ஐசிசி 20 ஓவர் உலககோப்பை வரும் அக்டோபர் 18ம் தேதி தொடங்கி, நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெற இருக்கிறது. தற்போது கொரோனா காரணமாக ஒவ்வொரு கிரிக்கெட் தொடர்களாக ரத்து செய்யப்பட்டு வருவதால், திட்டமிட்டப்படி 20 ஓவர் உலககோப்பை போட்டிகள் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள ஐசிசி, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அறிவித்த தேதிகளிலே போட்டிகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும்  தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments