கொரோனா: உலகில் பலி 8 ஆயிரத்தை நெருங்கியது

0 6500

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியது.

 சீனாவின் உகான் பகுதியில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளிலும் உயிர்களை பலி கொண்டு வருகிறது. சீனாவில் இன்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி மேலும் 11 பேர் பலியாகியுள்ளனர். தென்கொரியாவில் 3 பேரும், அமெரிக்காவில் 7 பேரும், அல்பேனியா, மால்டோவா, ஆஸ்திரேலியா நாடுகளில் தலா ஒருவரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். துருக்கியில் கொரோனாவுக்கு முதல் பலியாக 89 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பலி எண்ணிக்கையும் சேர்த்து, உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 992ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் புதிதாக 113 பேருக்கும், ஆஸ்திரேலியாவில் 105 பேருக்கும்,தென்கொரியாவில் 93 பேருக்கும், சீனாவில் 13 பேருக்கும், ஜப்பானில் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.இஸ்ரேலில் 90 பேருக்கும், தாய்லாந்தில் 35 பேருக்கும், பிரேசிலில் 3 பேருக்கும், பிலிப்பைன்சில் 6 பேருக்கும், மெக்சிகோ, தென்னாப்பிரிக்காவில் தலா 11 பேருக்கும் கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் உலகில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதேபோல் உலகம் முழுவதும் 82 ஆயிரத்து 779 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  அமெரிக்காவில் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது. அந்த நாட்டின் நியூயார்க், வாசிங்டன் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. பலி எண்ணிக்கை நூறை கடந்து 116ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பாதித்தோரின் எண்ணிக்கையும் 6 ஆயிரத்து 524ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments