கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் செய்யவேண்டியது என்ன.?

0 1951

உலகத்தை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நம் நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ள நிலையில், ஒருவரது வீட்டில் உள்ளவர் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

எதை விட்டாலும் மனதைரியத்தை விட கூடாது என்பது நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்ல, அவருடன் இருக்க கூடிய குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்தும். வைரஸ் தொற்று தாக்கியவரின் குடும்ப உறுப்பினர்கள் பதற்றமடையாமல் மனஅமைதியுடன் இருப்பது மிக அவசியம்.

அதே போல வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் மனரீதியாகவும் சரி உடல் ரீதியாகவும் சரி மிகவும் பாதிக்கப்பட்டிருக்க கூடும். அந்த அழுத்தத்தில் இருந்து அவரை வெளியே கொண்டு வர உதவும் வகையில் உடனிருப்பவரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

அதே போல கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஏதேனும் ஒன்றிலிருந்து திரும்பும் ஒருவருக்கு நோய்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அவரது குடும்ப உறுப்பினர்களும் கொரோனவால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நபரை சுற்றியுள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல்தடுக்க வழங்கப்பட்டுள்ள கீழ்காணும் அறிவுறுத்தல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

* வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். இது வெளியாட்களுக்கு வைரஸ் பரவாமல் தடுக்கும்.

* அலுவலகம், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் உட்பட பொது வெளிகளுக்கு செல்லாமல் சமூக நடவடிக்கைகளிலிருந்து விலகி இருத்தல் வேண்டும்

* குறிப்பாக செல்லப்பிராணிகளிடமிருந்து விலகி இருக்க தனி அறைகள் மற்றும் குளியலறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

* பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி செய்கிறீர்கள் என்றால், உங்கள் மூக்கு மற்றும் வாயை முழுமையாக மறைக்கும் முகமூடியை அணியுங்கள்.

* ஆல்கஹால் அடிப்படையிலான சானிட்டைசரைப் பயன்படுத்துவதும், கழுவப்படாத கைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பதும் வைரஸை எதிர்த்துப் போராட உதவும்.

* பாதிக்கப்பட்ட நபர் பயன்படுத்தும் பாத்திரங்கள், துண்டுகள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களை வேறு யாரும் பயன்படுத்த கூடாது.

* அதே போல கொரோனா அறிகுறி குறித்து சரியாக வழிநடத்தும் ஒரு மருத்துவ நபருடன் தொடர்பில் இருப்பது அவசியம்.

* 6 அல்லது 8 மணி நேரத்திற்கு ஒரு முறை அணிந்திருக்கும் முகக்கவசத்தை மாற்றுவது அவசியம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments