சோனாகச்சியில் கொரோனா குறித்து பாலியல் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

0 1006

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை யாரும் பாதிக்கப்படாத நிலையில், கொல்கத்தாவிலுள்ள சிவப்பு விளக்கு பகுதியான சோனாகச்சியில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து தெருக்கள் முழுவதும் வெறிச்சோடின.

ஆசியாவிலே மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்துசெல்வர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 10 நாட்களாகவே வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சில ஆயிரமாக குறைந்துள்ளது.

அதே போன்று பாலியல் தொழிலாளிகள் பலர் தற்போது பணியில் ஈடுபடுவதை நிறுத்தி உள்ளனர். கொரோனா குறித்து இங்குள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்பட்டுள்ளதுடன், இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments