பெரியசவாலை எதிர்கொள்வதால் பொதுமக்கள் பொறுமை காக்க பினராயி விஜயன் கோரிக்கை

0 785

கொரோனாவால் சுற்றுலா, பொதுபோக்குவரத்து, கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பெரியசவாலை எதிர்கொள்வதால் அதிலிருந்து மீண்டு வருவதற்கு பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டுமெனவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அம்மாநிலத்தில் நேற்று 3 பேருக்கு கெரோனா பாதிப்பு உறுதி செய்திருப்பதன் மூலம், இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வரும் கேரளாவை சேர்ந்த பலர் தற்போது நாடு திரும்பி வருவதால், அதிக சுமை ஏற்பட்டு இருப்பதாக கூறினார். இருப்பினும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments