முகக் கவசம், சோப்பு அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு

0 2979

முக கவசம், சானிடைசர், சோப்பு ஆகிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள தமிழக அரசு, இது குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்ணையும் அறிவித்துள்ளது.

இந்த பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பொட்டல பொருட்கள் விதிகளின்படி, தயாரிப்பு நிறுவனத்தின் முழுமுகவரி, எடை, தயாரிக்கப்பட்ட மற்றும் காலாவதியாகும் மாதம், விற்பனை விலை ஆகிய விபரங்களை தெளிவாக பாக்கெட்டுகளில் அச்சிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது TNLMCTS என்ற மொபைல் ஆப் மூலமாகவோ, 044-24321438 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ புகார் அளிக்கலாம் எனவும் தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments