கொரோனா அச்சுறுத்தலால் திருப்பதியில் பக்தர்கள் வருகை குறைவு

0 1313

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் குறைந்த நிலையில், ஒரு சில பக்தர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தரிசனம் செய்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொது இடங்களுக்குச் செல்வதை மக்கள் தவிர்த்து வருவதால் ஏழுமலையான் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

இதனால் ஒரு மணி நேரத்திற்குளாகவே இலவச தரிசனம் செய்ய முடிவதால், ஒரு சில பக்தர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஏழுமலையானை கூட்டமின்றி தரிசனம் செய்கின்றனர். வழக்கமாக இலவச தரிசன வரிசையில் சென்றால் எட்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments