திருநெல்வேலி மற்றும் விருதுநகரில் 2 பேருக்கு கொரோனா அறிகுறி?

0 111946

திருநெல்வேலி மற்றும் விருதுநகரில், கொரோனோ பாதிப்பு அறிகுறிகளுடன், இரண்டு பேர், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அடைய கருங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர், கேரளாவில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அண்மையில் ஊர் திரும்பிய அவருக்கு, கொரோனா அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கல்லூரியொன்றில், பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

2 தினங்களுக்கு முன்பு ஊர் திரும்பிய அவர், தொடர் காய்ச்சல், சளி போன்ற கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருந்ததால், ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையின் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments