தேசிய ராணுவக் கல்லூரி மூடப்படுவதாக அறிவிப்பு

0 663

கொரோனா தொற்றுநோய் பாதிப்பு எதிரொலியாக, டெல்லியில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த 25 ராணுவ அதிகாரிகள் உட்பட 100 பேர் இங்கு பயிற்சி மேற்கொள்ளும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சண்டிகரில், திரையரங்குகள், மால்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, திரிபுரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், கொரோனா குறித்து தவறான தகவல்கள் அடங்கிய வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய நபரை, கொரேகான் (Koregaon) காவல்நிலைய போலீசார் கைது செய்திருக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments