உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து 50 சதவீதம் வீழ்ச்சியடைய வாய்ப்பு.!

0 1090

உலகம் முழுவதும் கொரோனா பீதி அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு விமான பயணிகளின் போக்குவரத்து ஜூன் வரை சுமார் 50% வரை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள உலகளாவிய பயண தடைகள் காரணமாக பன்னாட்டு விமான நிறுவனங்களும் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சர்வதேச விமான நிறுவனங்களால் ஏற்கனவே ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட தேவைகள் அதிகரித்து வரும் நாடுகளால் அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

இந்நிலையில் நம் நாட்டில் வெளிநாட்டினர் வருவதற்கு வழங்கப்படும் விசாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு. அதேபோல மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் கொரோனாவின் தாக்கம் உள்நாட்டு விமான சேவையிலும்  பலமாக எதிரொலிக்கும் என கூறப்பட்டுள்ளது. குறைவான பயணியர் எண்ணிக்கையை காட்டிலும், கட்டண குறைப்பு மூலம் விமானங்களின் இயக்க வரம்புகள் குறைந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments