கொரோனா தொற்றுநோய் பாதிப்பை கண்டறிய உதவும் கூகுள்..!

0 4100

கொரோனா தொற்றுநோய் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிவதற்கான அடிப்படை சோதனைகளை ஆன்லைனில் முன்னெடுக்கும் வகையிலான இணையதளத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த இணையதளத்தை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் கூகுள் வடிவமைத்திருக்கிறது.

https://www.projectbaseline.com/study/covid-19/ என்ற இணையதளத்திற்குள் நுழைந்தால், முதலில், தீவிர இருமல், சளி தொந்தராவால் அவதிப்படுகிறீர்களா? அல்லது, முச்சுவிடுதல் சிரமம் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பப்படுகிறது.

இதில், கொரோனா அறிகுறி இருப்பவர்கள், உடனடியாக, கலிபோர்னியா மாகாணத்தில், குறிப்பிட்ட 2 மாவட்டங்களில், நடமாடும் கொரோனா பரிசோதனை மையத்தின் மூலம், தொற்றுநோயை உறுதி செய்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள கூகுள் இணையதளம் வழிகாட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments