நாளை முதல் படப்பிடிப்புகள் ரத்து...? திரையரங்குகளையும் மூடுவது குறித்து அலோசனை

0 2276

திரைப்பட தொழிலாளர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளதால் தமிழகத்தில் நாளை முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரானா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்புகளில் பங்கேற்பதில்லை என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஃபெப்சி ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்த தமிழ் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளை வெள்ளிக்கிழமை முதல் மூடுவது தொடர்பாக திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments