கொரோனா எதிரொலி - ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை குறைவு

0 633

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, கடந்த 2 வாரங்களாக, ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை 20 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளதாக, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும், அதன் வழியாகவும் 120க்கும் மேற்பட்ட ரயில்களும், எழும்பூரிலிருந்து 60க்கும் மேற்பட்ட ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கூட்டம் கூடும் இடங்களில், கொரோனா எளிதில் பரவும் என்ற நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையின் காரணமாகவும், அந்த தொற்றுநோய் குறித்த அச்சம் காரணமாகவும், ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பொதுசுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையின் மருத்துவ குழுக்கள் மூலம், ரயில் பயணிகளுக்கு, இன்ஃப்ராரெட் தெர்மா மீட்டர் (InfraRed Thermometer) மூலம், உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments