நோய் வருவதற்கு முன் மருந்து எடுத்துக்கொள்வது சாலச்சிறந்தது - தேசிய தடுப்பூசி தினம்

0 867

லகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ்க்கு இது வரை 6000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலைமையில் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். வந்தப்பின் குணப்படுத்துவதை  விட வருமுன் காப்பதே சாலச்சிறந்தது என்பதை போல கொரானாவை கூட சரியாக கண்காணித்தால்  எளிதாக வென்றுவிடலாம்.

நோய் தடுப்பு என்பது நம் உடலில் நடந்து கொண்டிருக்கும் ஒரு இயற்கை செயல்பாடு ஆகும். நோய் கிருமிகள் அல்லது உடலைச் சாராத ஏதேனும் ஒன்று உடலுக்குள் நுழையும் போது இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் அதனை தடுக்கிறது. சில செல்கள் தன்னால் அழிக்கப்பட்ட நோய் கிருமியை நினைவில் வைத்து கொண்டு அடுத்த தாக்குதலில் இருந்து நம் உடலை காக்கிறது. ஒரு வேளை மனித உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானால் நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அதை தடுப்பதற்கும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் செயற்கை தடுப்பூசிகள் போடப்படுகிறது

தடுப்பூசிகள் எவ்வாறு செயல்படுகிறது ?

முள்ளை முள்ளால் எடுப்பது போல, நோய் கிருமிகளை அழிக்க செயற்கையான நோய்கிருமிகள் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.நோய் ஏற்படுத்தும் தொற்றுக்கிருமிகளை செயலிழந்த நிலையில் உடலுக்குள் செலுத்துவதே தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசிகளின் முக்கிய பணியாகும்.இந்த நோய்க்கிருமிகள் மனித உடலுக்குள் நுழைந்ததும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டி அதன் செயல்பாட்டை அதிகரித்து நோய்க்கு எதிரான ஆண்டிபாடிகள் உருவாக்கிறது. இதன் மூலம் ஆண்டிபாடிகளின் ஞாபகத்திறன் அதிகரித்து நோய்தொற்றிலிருந்து தடுக்கிறது.

தடுப்பூசி கண்டுபிடிப்பு

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பெரியம்மை என்ற நோயால் மக்கள் பெரிதும் பாதித்து இருந்தார்கள்.இந்நோயால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.அதிலிருந்து விடுபடமுடியாமல் தவித்து கொண்டிருந்த மக்களுக்கு 1798ல் எட்வர்டு ஜென்னர் என்பவர் ஸ்மால் பாக்ஸ் வேக்சின் தடுப்பு மருந்தை கண்டறிந்தார்.இந்த தடுப்பூசியின் பயனால் 1980 ல் ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றிலும் அழிந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.  

அதன் பின்  ஏராளமான தடுப்பூசிகளும்,தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காரணத்தால் எட்வர்டு ஜென்னர் தடுப்பூசி வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவரை தொடர்ந்து லூயிஸ் பாஸ்டர், காலரா, ஆந்தாரக்ஸ், பிளேக் போன்ற நுண்ணுயுரி கிருமிகளுக்கு நோய் தடுப்பு மருந்துகளை கண்டறிந்ததோடு மட்டுமில்லாமல் அவற்றின் தாக்கத்தை இந்த உலகத்திற்கு எடுத்துரைத்தவர்.முதன் முதலில் 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது.அந்த தினம் தேசிய தடுப்பூசிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் பிறகு பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கபட்டாலும் பிரசித்த பெற்ற போலியோ தடுப்பு மருந்தும் மட்டும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அட்டவணை

இன்றைய காலத்தில் கருவில் உள்ள  குழந்தை முதல் 16 வயது வரை தடுப்பூசிகள் போடப்படுகிறது.இன்றைக்கு ஏறத்தாழ 26 க்கு மேற்பட்ட தொற்று நோய்களுக்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு தொடர் பயன்பாட்டில் இருந்து வருகிறது.பச்சிளம் குழந்தைகளுக்கு  ஒவ்வொரு மாதத்திலும் போடப்படும் தடுப்பூசிகளை சரியாக கடைப்பிடித்தல் நோய்தொற்று கிருமிகளிலிருந்து எளிதாக காப்பாற்றலாம்.நோய் என்னவென்று ஆராய்ந்து ,அதைத் தணிக்கும் வழியையும் ,உடலுக்கு பொருந்தும் மருந்தினை உட்கொண்டு உடல்நலத்தை பேண வேண்டும்

மேலும் தகவல்களுக்கு https://nhm.gov.in/New_Updates_2018/NHM_Components/Immunization/report/National_Immunization_Schedule.pdf

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments