கொரோனா அச்சத்தால் வெறிச்சோடிய சபரிமலை..!

0 4539

சபரிமலையில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுவாக விடுமுறை நாட்களில் சபரிமலையில் நடைதிறந்து இருந்தால் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் வரவேண்டாம் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்திருந்ததால் பக்தர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருந்தது.

பம்பை - நீலிமலையேற்றம் - அப்பாச்சிமேடு - சன்னிதானத்தில் மிக அமைதியான சூழ்நிலையே நிலவியது. சபரிமலைக்கு செல்லும் வழியில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இதற்கிடையில் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் உள்ளிட்ட முக்கிய கோவில்களுக்கு சில நாட்கள் பக்தர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments