28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல்

0 684

சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் காலகட்டத்தில் 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழலில் இருப்பதாகவும் யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் சிரிய உள்நாட்டுப் போரில் 9 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக யுனிசெஃப் அமைப்பின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போர்ச் சூழலின் போது சிரியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் சுமார் 48 லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும், 28 லட்சம் குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், போர், வன்முறை, மரணம் மற்றும் இடப்பெயர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மனதளவில் கடுமையான அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments