கொரோனா காரணமாக இந்தியா - வங்கதேசம் இடையிலான ரயில்கள் நிறுத்தம்

0 622

கொரோனா பாதிப்பு சூழல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து, அண்டை நாடான வங்கதேசத்துக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு ரயில்வே அதிகாரி ஒருவர், மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்தின் இதர நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டதாகக் கூறினார்.

இதன்படி, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலிருந்து, வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு இயக்கப்படும் ‘மைத்ரீ’ விரைவு ரயிலும், அந்நாட்டின் குல்னா நகருக்கு இயக்கப்படும் ‘பந்தன்’ விரைவு ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த போக்குவரத்து ரத்தானது, ஏப்ரல் 15-ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையோ அமலில் இருக்கும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments