இந்திய மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் அச்சம்

0 1089

கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் அமெரிக்காவில் தங்கி பயின்று வரும் இந்திய மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக, பெற்றோரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

அங்கு நோய் தொற்றை கட்டுப்படுத்த 150 கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலை மோசமடைந்தால் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டு, இந்திய மாணவர்கள் தாயகத்திற்கு திரும்பவும் வாய்ப்புள்ளது.

இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் வேலை வாய்ப்புகளும் பறிபோக வாய்ப்புள்ளது என பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும், கல்லூரி வளாகங்களில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால், அவர்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments