எண்ணெய் குழாயில் பயங்கர தீ விபத்து- 15 பேர் உயிரிழப்பு

0 906

நைஜீரியாவில் எண்ணெய் குழாயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. தலைநகர் லாகோசில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டதால் மக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட சேத விவரம் உடனடியாக தெரியவில்லை என்று மீட்பு படையினர் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments