ஐரோப்பாவில் கொரோனா வைரஸ்க்கு 2000 பேர் பலி

0 2136

ஐரோப்பாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை அடைத்துள்ளன. மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் முக்கிய நகரவீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொரோனாவின் மையப்பகுதியாக ஐரோப்பிய நாடுகள் விளங்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

மேலும் பல ஆயிரம் பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் அதிகமாக கூடியுள்ளது. 24 மணி நேரத்தில் அங்கு 100 பேர் உயிரிழந்தனர்.

சீனாவில் இருந்து, இத்தாலி, ஈரான், ஜெர்மனி ஸ்பெயின், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் கொரோனா பரவி வருகிறது.

இதனால் பல்வேறு நாடுகள் தங்கள் எல்லைகளை அடைத்து விட்டன.விமான சேவைகள், விசா சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வணிக மையங்கள்,பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பங்குச் சந்தைகள், உணவகங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டிருப்பதால், ரோம், மாட்ரிட், மணிலா உள்பட பல முக்கிய நகரங்களின் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அடுத்து வரும் வாரங்கள் இன்னும் வலி மிக்கவையாக இருக்கும் என்று ஆஸ்திரிய பிரதமர் செபாஸ்டின் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். பல்வேறு சிறிய நாடுகளின் பொருளாதாரம் கொரோனாவால் உருக்குலைந்திருக்கும் நிலையில் ஈஸ்டருக்கு முன்பு நிலைமை மாறும் என்ற நம்பிக்கையுடன் பல நாடுகள் அமைதி காக்கின்றன.

செக்கோஸ்லாவிய அரசு நாடு முழுவதையும் தனிமைப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. அல்பேனியா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் எல்லைகளை நேற்று முதல் ஜெர்மனி அடைத்து விட்டது. போலந்தும் எல்லைகளை மூடியிருப்பதுடன் சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments