மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை

0 506

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் 6 புதிய உறுப்பினர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நாளைமறுநாள் வெளியாகிறது.

காலியாக இருக்கும் 6 இடங்களுக்கு அதிமுக சார்பில் தம்பிதுரை, கே.பி. முனுசாமி, த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் 3 பேர், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் போது, சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும். எனவே 26 -ம் தேதி, தேர்தல் நடைபெறாது. 

மாநிலங்களவை தேர்தல் அட்டவணை படி, வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 18 -ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளதால்,  மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் புதிய உறுப்பினர்கள், அதே நாள் மாலையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments