சீனா, இத்தாலிக்கு அடுத்து கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஈரான்

0 2877

ஈரான் நாட்டில் கொரானா மிக வேகமாக பரவிவருவதால், பொதுமக்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறவேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனா, இத்தாலிக்கு அடுத்து கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான ஈரானில், மேலும் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரானாவால் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இந்நிலையில் பயணங்கள் மேற்கொள்வதை பொதுமக்கள் தவிர்த்துவிட்டு வீடுகளிலேயே தங்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் நிலைமை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஈரான் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானவுஸ் ஜஹன்பவுர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments