தேனியில் கொரானா பரவியதாக வதந்தி

0 3659

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கொரானா பரவியதாக வதந்திகள் கிளம்பியதால் தமிழக - கேரளா எல்லைப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கூடலுரைச் சார்ந்த பெண்மணி ஒருவர் காய்ச்சல், இருமலுடன் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதித்த மருத்துவர்கள் கொரானா பாதிப்பு இல்லை என்றும், அவருக்கு எலும்புருக்கி நோய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கூடலூரை சேர்ந்த பெண்மணிக்கு கொரானா இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில் தமிழக - கேரளா எல்லைப்பகுதியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி திரவம் தெளிக்கப்படுவதுடன், கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கும் கொரானா குறித்து விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments