கொரோனா அச்சுறுத்தல்: ரயில் பயணிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு

0 2961

குளிர்சாதன ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு, கம்பளி போர்வைகள் வழங்குவது இன்று முதல், நிறுத்தப்பட்டு உள்ளது.

கொரானா வைரஸ் தொற்று காரணமாக, ரயில்வே வாரியத்தின் ஆலோசனையை ஏற்று, தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

ஏசி பெட்டிகளின் திரைச்சீலைகளை அகற்றியுள்ள ரயில்வே நிர்வாகம், ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், தங்கள் வீடுகளில் இருந்தே கம்பளி போர்வைகளை எடுத்து வருமாறு, அறிவுறுத்தி உள்ளது.

படுக்கை விரிப்பு, தலையணை, தலையணை உறை உள்ளிட்டவை தேவை என கேட்கும் ரயில் பயணிகளுக்கு மட்டுமே கொடுக்க , ஊழியர்களை அறிவுறுத்தி  உள்ளதாகவும் செய்திக்குறிப்பு ஒன்றில், தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments