குழந்தைகள் சிகிச்சை பெறமுடியாத நிலை

0 1525

சிரியாவில் நீண்டகால போர் மற்றும் பொருளாதார தடை காரணமாக புற்றுநோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளது.

ஏறத்தாழ 9 ஆண்டு காலமாக சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரால், பாதிக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், நாட்டை விட்டு ஏராளமான மருத்துவர்கள் வெளியேறும் நிலை உள்ளது.

மற்றொருபுறம், பொருளாதார தடை காரணமாக புற்றுநோய் சிறப்பு மருந்துகளை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏராளமான குழந்தைகள் முறையான மருத்துவ சிகிச்சை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments