திருப்பதியில் குறையும் பக்தர்களின் வருகை

0 12750

கொரானா அச்சுறுத்தலால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 80 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக குறைந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் சேகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி, உறுப்பினர் சேகர் ரெட்டி ஆகியோர், சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியாகராய நகரில் கட்டப்படும் பத்மாவதி கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சேகர் ரெட்டி, திருப்பதி தரிசனத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் அதனை, ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம், அல்லது தேதியை மாற்றிக்கொள்ளலாம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments