உலக அளவில் 5800 ஐத் தாண்டிய கொரானா பலி

0 2323

உலக அளவில் கொரானா வைரசால் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐயாயிரத்து எண்ணூற்றைத் தாண்டியுள்ளது. 

இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரானா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 730. நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 839 ஆகும்.

75ஆயிரத்து 933 பேர் சிகிச்சைக்குப் பின் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 74 ஆயிரத்து 958 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிக அளவாகச் சீனாவில் எண்பதாயிரத்து 844 பாதிக்கப்பட்டனர். இவர்களில் மூவாயிரத்து 199 பேர் உயிரிழந்தனர். சிகிச்சைக்குப் பின் 66 ஆயிரத்து 912 பேர் நலம்பெற்றனர்.

பத்தாயிரத்து 733 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தாலியில் 21 ஆயிரத்து 157 பேருக்குக் கொரானா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 1441 பேர் உயிரிழந்தனர். சிகிச்சைக்குப் பின் ஆயிரத்து 966 பேர் நலம்பெற்றனர்.

17 ஆயிரத்து 750 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரானா தாக்கி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையில் சீனாவை விட இத்தாலி முன்னிலையில் உள்ளது. கொரானா வைரசுக்கு ஈரானில் 611 பேரும், தென்கொரியாவில் 75 பேரும், ஸ்பெயினில் 196 பேரும் பலியாகினர். 

இந்த நிலையில் பிரிட்டனில் கொரானா வைரஸ் பரவலைத் தடுக்கவும், இது தொடர்பாக வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரிட்டனில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 140 பேரில் 21 பேர் உயிரிழந்தனர். 18 பேர் சிகிச்சைக்குப் பின் நலம்பெற்றுள்ளனர். 1101பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசி எலிசபெத் பங்கேற்க இருந்த பொதுநிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல், தேர்வு, கருத்தரங்கம், விளையாட்டுப் பட்டி ஆகியன தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கொரானா பரவல், கொரானா தடுப்பு ஆகியவை குறித்துச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்தவும், உண்மையான தகவல்களைக் கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரிட்டனில் கொரானா வைரஸ் பரவலைத் தடுக்கவும், இது தொடர்பாக வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரிட்டனில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 140 பேரில் 21 பேர் உயிரிழந்தனர். 18 பேர் சிகிச்சைக்குப் பின் நலம்பெற்றுள்ளனர். 1101பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசி எலிசபெத் பங்கேற்க இருந்த பொதுநிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல், தேர்வு, கருத்தரங்கம், விளையாட்டுப் பட்டி ஆகியன தள்ளி வைக்கப்பட்டுள்ளன. கொரானா பரவல், கொரானா தடுப்பு ஆகியவை குறித்துச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகளைக் கட்டுப்படுத்தவும், உண்மையான தகவல்களைக் கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments