ஈரானிலிருந்து மீட்கப்பட்ட 234 இந்தியர்கள் ராஜஸ்தானில் தங்கவைப்பு

0 1084

கொரானா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானிலிருந்து மீட்டு அழைத்துவரப்பட்ட 234 இந்தியர்கள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தனித்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 12,729 பேர் கொரானா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. அங்கு சிக்கி தவித்து வரும் இந்தியர்களை படிப்படியாக மீட்டு வரும் இந்தியா, ஏற்கனவே 2 கட்டங்களாக 102 பேரை மீட்டது.

அந்தவகையில் 3ம் கட்டமாக 103 புனித பயணிகள், 131 மாணவர்கள் என மொத்தம் 234 பேர் ஈரானில் இருந்து, விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அழைத்து வரப்பட்டனர். அங்கு ராணுவத்துக்கு சொந்தமான தனித்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்படவுள்ளனர்.

இந்தியர்களை மீட்க ஒத்துழைப்பு நல்கிய ஈரான் தூதரகம் மற்றும் ஈரானுக்கான இந்திய தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments