கொரானா எதிரொலி: உச்ச நீதிமன்றத்தில் 12 அவசர வழக்குகள் மட்டுமே விசாரணை

0 1419

கொரானா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் 6 அமர்வுகளில் 12 அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட உள்ளன.

கடந்த 2018ஆம் ஆண்டில் பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கெளதம் நவ்லகா, ஆனந்த் தெல்தும்டே ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள், நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 6 அமர்வுகளும் 6 வழக்குகளை முதலில் விசாரிக்கும். அதன் பிறகு அடுத்த 6 வழக்குகளை நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர். கொரானா வைரஸ் பரவி வருவதன் காரணமாக வழக்கறிஞர்களைத் தவிர வேறு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கொரானா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments