பருவநிலை மாற்றம்.. 22 கோடி வயதான மரத்திற்கு ஆபத்து..!

0 15145

உலகின் மிகவும் பழங்கால மரம் மாறிவரும் பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் சிடர்பெர்க் மலைப்பகுதியில் கிளான்வில்லியம் சிடார் என்ற மரம் உள்ளது. சுமார் 22 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகக் கருதப்படும் இந்த மரம்தான் உலகிலேயே மிகவும் வயதான மரம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காலநிலை மாற்றம், உலகம் முழுவதும் அதிக வெப்பநிலை, குறைந்த மழைப்பொழிவு ஆகிய காரணிகளால் இந்த மரத்தின் விதைகள் பலமிழந்து காணப்படுவதாகவும், இதனால் இந்த மரம் மேலும் பரவும் முறை தடுக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உறைபனிக்காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் இந்த மரத்தின் பின் வந்த சந்ததி மரங்கள் சுமார் 13 ஆயிரத்து 500 வகை மரங்கள் இருப்பதாகவும், அவைகளும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் தாவரவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments