கொரானா அச்சம்-எகிப்தில் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை

0 562

எகிப்தில் இன்று முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு 2 வாரம் விடுமுறைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எகிப்து பிரதமர் மோஸ்தபா மேட்பவுலி கூறுகையில் கொரானா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், முக்கிய விழாக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில் எகிப்தில் இதுவரை 109 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments