234 இந்தியர்கள் ஈரானில் இருந்து மீட்பு - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

0 548

கொரானா பாதிப்புக்கு ஆளான ஈரான் நாட்டில் இருந்து 234 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதில் 131 பேர் மாணவர்கள் 103 பேர் புனிதப் பயணம் சென்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் நாட்டு தூதரகம் இதற்கு ஒத்துழைப்பு அளித்திருப்பதாக கூறிய அவர் ஈரான் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஏர் இந்தியா விமானம் மூலம் இரண்டு முறை இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு ஜெய்சல்மேரில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை மூன்றாவது முறையாக 44 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் தாய்நாட்டை வந்தடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments