சிறுவன் அய்லான் குர்தி இறந்தது தொடர்பாக மூவருக்கு 125 ஆண்டுகள் சிறை

0 2219

துருக்கிய கடற்கரையில் சிறுவன் அய்லான் குர்தி இறந்தது தொடர்பாக 3 பேருக்கு தலா 125 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு சிரியாவைச் சேர்ந்த ஏராளமானோர் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு சென்றனர். அப்போது 3 வயதுடைய அய்லான் குர்தி என்ற சிறுவன் தனது பெற்றோருடன் சென்று கொண்டிருந்த படகு கடலுக்குள் மூழ்கியது.

இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அய்லான் குர்தியும் துருக்கி கடற்கரையில் முகம் புதைத்த நிலையில் உயிரிழந்து கிடந்த புகைப்படம் உலகையே உலுக்கியது. அகதிகளின் அடையாளமாக மாறிப்போன அந்தப் புகைபடம் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியது.

இந்நிலையில் அய்லான் குர்தி உள்ளிட்டவர்களை படகில் அழைத்துச் சென்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது துருக்கி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனிதர்களைக் கடத்திச் சென்றதாகவும், உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாகவும் கூறி மூவருக்கும் தலா 125 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்புக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments