கொரானா அச்சுறுத்தலால் பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைப்பு

0 511

கொரானா வைரஸ் அச்சுறுத்தலால் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற இருந்த பத்ம விருதுகள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பலதுறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

இவர்களுக்காக விருதுகளை வழங்கும் விழா டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஏப்ரல் மாதம் 3-ம் தேதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த விழா ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், மறுதேதி குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments