இத்தாலியில் உள்ள இந்தியர்களை மீட்க விரைந்தது விமானம்

0 4023

கொரானாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முதல் 3 நாடுகள் பட்டியலில் 2 - வது இடம் வகிக்கும் இத்தாலியில்  சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க, ஏர்- இந்தியா விமானம் மிலன் நகருக்கு விரைந்துள்ளது.

அங்கு, இந்திய மாணவர்கள் பலருக்கு, கொரானா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு, தனிமைபடுத்தப்பட்ட சிறப்பு வார்டுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மருத்துவ குழுவினரோடு மிலன் சென்றுள்ள இந்திய விமானம், அநேகமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் தாயகம் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க டெஹ்ரான் விரைந்துள்ள மற்றொரு விமானம் 3 - வது குழுவினருடன் நள்ளிரவு மும்பை வந்து சேரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில், கொரானா வைரஸூக்கு ஒரே நாளில் 97 பேர் பலியாகி, உயிரிழந்தோர் எண்ணிக்கை  611 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments