இறந்தவர்களின் உடலில் இருந்து கொரானா பரவாது - டெல்லி எய்ம்ஸ்

0 4115

இறந்தவர்களின் உடல்களில் இருந்து கொரானா வைரஸ் பரவாது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மூச்சுக்காற்றில் இருந்தே வைரஸ் பரவும் என்பதால், இறந்தவர்களின் உடலில் இருந்து பிறருக்குப் பரவாது எனத் தெரிவித்தார்.

இருமல் தும்மல் ஆகியவை இருந்தால்தான் கொரானா பரவும் என்பதால், இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ அச்சப்படத் தேவையில்லை எனவும் ரண்தீப் குலேரியா தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments