LKG,UKG வகுப்புகளுக்கு அறிவித்தபடி விடுமுறை - முதலமைச்சர்

0 17176

கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி விடுமுறை தான் என்றும் மார்ச் 31 வரை விடுமுறை என்பதில் மாற்றமில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் மதுரை விமான நிலையதில் செய்தியாளர்களிடம் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அறிவித்தபடியே விடுமுறை விட தான் உத்தரவிட்டுவிட்டதாகவும், அது தொடர்பான அறிவிப்பு திங்கட்கிழமை வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

அ.தி.மு.க. குபேரனுடைய கஜானாவை வைத்திருப்பதாக ரஜினி கூறியது குறித்த கேள்விக்கு, கட்சியே ஆரம்பிக்காத நிலையில் தேவையற்ற கருத்துக்களை கற்பனையாகக் கூறக்கூடாது என முதலமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments