இயக்குனரை திருமணம் செய்யவுள்ளதாக வெளியான தகவல் பொய் என அனுஷ்கா மறுப்பு

0 6961

இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடியைத் திருமணம் செய்யவுள்ளதாக வெளியான தகவலை நடிகை அனுஷ்கா மறுத்துள்ளார்.

தென்னிந்திய முன்னணி நடிகைகளுள் ஒருவரான அனுஷ்கா, ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான இயக்குநரான பிரகாஷ் கோவெலமுடியைத் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் உலா வந்தன.

இந்நிலையில் இதனை மறுத்துள்ள அனுஷ்கா, இந்த தகவல் பொய்யானது என தெரிவித்துள்ளார். திருமணம் என்பது முக்கியமான விஷயம் என தெரிவித்த அவர், தனக்கு திருமண பேச்சுவார்த்தை நடக்கும் பட்சத்தில், தானே அனைவருக்கும் அறிவிப்பேன் என விளக்கமளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments