கொரானா அச்சுறுத்தலால் திருப்பதியில் பக்தர்களின் வருகை குறைந்தது

0 25137

கொரானா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட குறைந்தது.

கொரானா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள், காத்திருப்பு அறைகளில் தங்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில் குமார் சின்கால், ஆலயத்துக்கு வரும் பக்தர்கள், உரிய அடையாள சான்றிதழ்கள் கொடுத்து டோக்கன் வாங்கிக்கொண்டு, நடைதிறக்கும்போது தரிசனம் செய்யலாம் என்றார்.

ஆர்ஜித வசந்தோற்சவம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதற்காக ஏற்கெனவே கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு, விஐபி தரிசன டிக்கெட்டுக்களாக அவை மாற்றித்தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தினங்களில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வருகை தரும் நிலையில், கொரானா அச்சுறுத்தலால் 35ஆயிரம் பக்தர்கள் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். இதனால் 6 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments