" வரும் முன் காப்போம் ".. கொரோனா குறித்து கோலி ட்விட்..!

0 2275

கொரோனா பீதியால் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், குணப்படுத்துவதை விட வரும் முன் தற்காத்து கொள்வதே சிறந்தது என கூறியுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வரும் நேரத்தில், அனைவரும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்குமாறு விராட் கோலி கூறியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கோலி, COVID19 நோய் தொற்றுக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி, அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருங்கள் என கூறியுள்ள கோலி, மிக முக்கியமாக நாம் நினைவு கொள்ள வேண்டியது நோய் வந்த பின் குணப்படுத்துவதை விட, நோய் வராமல் தற்காத்து கொள்வதே சிறந்தது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார் கோலி.

மற்றொரு இந்திய வீரரான கே.எல்.ராகுல் சோதனைமிக்க இந்த காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து கவனித்துக்கொள்வோம். சுகாதார வல்லுநர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றி எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என கூறி ட்விட் செய்துள்ளார்.

Let's stay strong and fight the #COVID19 outbreak by taking all precautionary measures. Stay safe, be vigilant and most importantly remember, prevention is better than cure. Please take care everyone.

— Virat Kohli (@imVkohli) March 14, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments