இலங்கை சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது இங்கிலாந்து அணி

0 1056

கொரானா அச்சம் காரணமாக இலங்கையில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத்தை இங்கிலாந்து கிரிக்கெட் அணி ரத்து செய்துவிட்டது.

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு இங்கிலாந்து அணி வந்திருந்தது. ஸ்ரீலங்கா போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நேற்று பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது இலங்கை சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பிறகு வேறு ஒரு தேதியில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயிற்சி ஆட்டத்திலிருந்து இங்கிலாந்து அணியினர் பாதியில் புறப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments