தங்கம் விலை தொடர்ந்து சரிவு..!

0 6697

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 632 ரூபாய் சரிந்துள்ளது.

சென்னையில் கடந்த 11ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 4 ஆயிரத்து 13 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம், இன்று 79 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 934 ரூபாயாக உள்ளது. சவரன் தங்கம் நேற்று 32 ஆயிரத்து 104 ரூபாயாக இருந்தநிலையில் இன்று 632 ரூபாய் சரிந்து 31 ஆயிரத்து 472 ரூபாயாக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளி நேற்று 46 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் இன்று 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 44 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. தங்கம் விலை சரிவுக்கு தங்கத்தை அதிகம் இருப்பு வைத்துள்ள அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் ஏதோ ஒரு நாட்டின் மத்திய வங்கி சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பு தங்கத்தை விற்றதே காரணமாக இருக்கலாம் என யூகிக்கப்படுவதாக முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments