கொரோனா வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில் எத்தனை நாள் வாழும்

0 38905

கொரோனா வைரஸ், பொருட்களின் மேற்பரப்பில் ஒருநாள் அல்லது அதற்கு மேற்பட்டும் வாழக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பெரும்பாலும், காற்றில் பயணிக்கும் நீர்த்துளிகள் வாயிலாகவே பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறு பொருட்களின் மேற்பரப்பில் பரவி படிந்துவிடும் கொரானா வைரசின் வாழ்நாளானது,  வெப்பநிலை, ஈரப்பதம், பொருளின் தன்மை போன்றவற்றின் அடிப்படையில் வேறுபடும் என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

சராசரியாக 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் கொரானா வைரஸ் எஃகு பொருட்களின் மேற்பரப்பில் 2 நாட்களும், மரம் மற்றும் கண்ணாடியின் மேற்பரப்பில் 4 நாட்களும், உலோகம், செராமிக், பிளாஸ்டிக் போன்ற பொருட்களின் மீது 5 நாட்கள் வரையிலும் வாழ கூடியது என ரேச்சல் கிரகாம் எனும் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments