போலீசாரைத் துப்பாக்கியால் சுட முயன்ற இளைஞரை சுட்டுப் பிடித்த போலீசார்

0 1355

அமெரிக்காவில் போலீசாரைத் துப்பாக்கியால் சுட முயன்ற இளைஞரை போலீசார் சுட்டுப் பிடித்த வீடியோ வெளியாகி உள்ளது.

வடக்குக் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ஜேவியர் டோரஸ் என்ற இளைஞர் பீட்ஸா டெலிவரி கொடுக்கும் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் பீட்ஸா வழங்க ஒரு வீட்டுக்குச் சென்றபோது, இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்துள்ளார்.

இதனைக் கண்ட வீட்டு உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினரைக் கண்டு டோரஸ் ஓட்டம் பிடித்தார். அவரை நிற்கச் சொல்லியும், துப்பாக்கியைக் கீழேபோடும் படியும் போலீசார் பலமுறை எச்சரித்தனர்.

ஒருகட்டத்தில் எதிர்பாராதவிதமாக போலீசாரை நோக்கி துப்பாக்கியுடன் ஓடி வந்தார். இதனைக் கண்ட போலீசார் டோரஸை சுட்டதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments